பிக் பாஸ் 3வது சீசனின் முக்கிய போட்டியாளரான மதுமிதா தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறார். தற்கொலைக்கு முயற்சித்த அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்க காரணம் என்ன? பிக் பாஸ் வீட்டில் அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா பிரபல இணையதள தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார்.

Tamil Girls Chat Room

அதில், ” பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது தான் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. பிறகு மூன்றாவது சீசனில் கூப்பிடவும் இம்முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன்.

பிக் பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். நம்ம தமிழ் ஆடியன்சுக்கு தான் நிகழ்ச்சி செய்கிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நம்ம கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர்.

கவின் மதிக்கவில்லை

கவின் யாரையும் மதிக்கமாட்டான். பொண்ணுங்க கூட மட்டும் தான் சுத்துவான். ஒரு அக்கா மாதிரி இருந்து அவனுக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவன் அதை கேட்கவே இல்லை. எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது.

சேரன் தான் நியாமானவர்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லொஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் அவள் நன்றாக தான் இருந்தாள். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவளது மனம் மாறிவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கு. அங்குள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை ஹலோ ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயது செய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன்.

இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார்.

இதற்கு நானும் பதில் அளித்தேன். ஹலோ ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன். ஆனால் அவர்கள் ஒற்றுக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர்.

அதனால தான் கையை அறுத்துகொண்டேன்
அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக் பாஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்” என மதுமிதா கூறியுள்ளார்.