விழுப்புரம் மாவட்டத்தின் கொம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்ததும் அவரது தந்தையே எப்பொழுதும் அவளை வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் திடீரென அந்த சிறுமியின் உறவுக்காரனான ராஜீவ் காந்தி என்ற வாலிபர் பள்ளிக்கு,அவரை அழைத்துவர சென்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆசிரியர்கள் கேட்டதற்கும், அவரது அப்பாதான் அழைத்துவரச் சொன்னார் என கூறியுள்ளார்.

Tamil Girls Chat Room

மேலும் உறவினர்தானே என எண்ணிய ஆசிரியர் சிறுமியை அவருடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் மாணவியை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தைலதோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பெரும் கூச்சலிட்டுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். ஆட்கள் வருவதை பார்த்தராஜீவ் காந்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சிறுமி அழுதுகொண்டே இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜீவ் காந்தியை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.