மருத்துவ துறையில் நிகழ்வும் முறைகேடுகள் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ துறை மற்றும் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதை கதைக்களமாக கொண்டு அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கியுள்ள ‘மெய்’ என்கிற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் தொடர்பான விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஒருமுறை காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்றேன். அப்போது என்னை கட்டாயப்படுத்தி பல பரிசோதனைகளை செய்து என்னிடமிருந்து ரூ.1 லட்சத்தை பிடுங்கி விட்டனர். மருத்துவதுறையில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என அவர் பேசினார்.