திண்டுக்கல்லில் தனது மனைவி வேறு ஆணுடன் டிக்டாக் வீடியோவில் இடம்பெற்றுள்ளதைக் கண்ட நபர் அவரை அடித்துக் கொன்றுள்ளார்.

கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் சிவசங்கரன் – சூரியகாந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக சூரியகாந்தி டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதிலும் முசிறியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரோடு இணைந்து அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே டிக் டாக்கை தாண்டிய பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Tamil Girls Chat Room

இதனால் ஆத்திரமடைந்த சூரியகாந்தியின் கணவர் சிவசங்கரன் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே நடந்த சண்டை முற்றவே கோபத்தில் மனைவியைக் கொலை செய்துள்ளார். பின்பு அவரை சாக்குப்பையில் கட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் போட்டுவிட்டு மனைவியைக் காணவில்லை என்று நாடகம் ஆடியுள்ளார்.

போலிஸார் சூரியகாந்தியின் டிக்டாக் தோழர் சக்திவேலை விசாரணை செய்ய தப்பித்து விட்டதாக நினைத்துள்ளார் சிவசங்கரன். ஆனால் சூரியகாந்தியின் செல்போன் சிக்னல் அவர்கள் வீடு இருந்த பகுதியிலேயே ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதைக் கண்டு சிவசங்கரன் மேல் சந்தேகம் வர கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.