உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் பால்.அவரது மனைவி சீமா பால். சீமா அதே பகுதியில் வசித்து வந்தஉமேஷ் பால் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர், உன்னுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் உமேஷ் பாலுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதுதொடர்பாக பஞ்சாயத்து கூடிய நிலையில் கணவர் ராஜேஷ் உன் விருப்பப்படி நீ உன்னுடைய காதலனுடன் செல் ஆனால், உன் காதலன் அவன் வளர்க்கும் 71 ஆடுகளை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று வியாபாரம் பேசியுள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட உமேஷ் 71 ஆடுகளை ராஜேஷிடம் ஒப்படைத்து விட்டு, தனது காதலி சீமாவை அழைத்து சென்றுள்ளார். அவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், உமேஷின் அப்பா இதுதொடர்பாக சண்டை போட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அனைவரையும் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது உனது ஆடுகளை வாங்கிகொள். ஆனால் எனது மனைவியை என்னுடன் அனுப்பிவிடு என கூறியுள்ளார்.

ஆனால் சீமா மீண்டும் ராஜேஷிடம் செல்ல மறுத்துள்ளார். மேலும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் அவரால் எனக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கமுடியவில்லை. ஆனால் இப்பொழுது நான் கர்ப்பமாக உள்ளேன். என்னால் அவருடன் செல்ல முடியாது என மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜேஷ் ஆடுகளை திருடவில்லை. உன் மகன் தான் கொடுத்துள்ளான் என உமேஷ்ன் தந்தையிடம் கூறி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.