SIIMA’ என்றழைக்கப்படும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்’ கடந்த ஏழாண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விருதுகள் 21 பிரிவுகளில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தாண்டு எட்டாவது ஆண்டாகவும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கத்தார் நாட்டில் தோஹா நகரில் இந்த விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.
தமிழ்த் திரையுலகத்தில் இருந்து நடிகைகள் ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், த்ரிஷா, ராய் லட்சுமி, கீர்த்தி சுரேஷ், மேனகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ஈஸ்வரி ராவ், ஓவியா, ரைஸா வில்சன், சஞ்சனா கல்ரானி, அனிருத் ரவிச்சந்திரன், நடிகர்கள் தனுஷ், கதிர், ஜெயம் ரவி, சந்தீப் கிஷன், யோகிபாபு, பாடகர் அந்தோணி தாசன், இயக்குநர்கள் பாண்டிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2018-ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட பிரிவில் விருது பெற்றவர்கள் பட்டியல் :
சிறந்த தமிழ்த் திரைப்படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குநர் – பாண்டிராஜ் (கடைக்குட்டி சிங்கம்)
சிறந்த நடிகர் – தனுஷ் – (வட சென்னை)
சிறந்த நடிகை – த்ரிஷா (96)
சிறந்த நடிகர் நடுவர்கள் விருது – ஜெயம் ரவி (அடங்க மறு)
சிறந்த நடிகை – நடுவர்கள் விருது – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் (60 வயது மாநிறம்)
சிறந்த துணை நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா)
சிறந்த வில்லி நடிகை – வரலட்சுமி சரத்குமார் (சர்கார்)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்திரன் (கோலமாவு கோகிலா)
சிறந்த பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன் (நானா தானா – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த ஆண் பாடகர் – அந்தோணி தாசன் (சொடக்கு மேல – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த பெண் பாடகர் – தீ (ரவுடி பேபி – மாரி-2)
சிறந்த அறிமுக நடிகை – ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்)
சிறந்த அறிமுக இயக்குநர் – நெல்சன் (கோலமாவு கோகிலா)
சிறந்த நடிகர் – சிறப்பு விருது – கதிர் (பரியேறும் பெருமாள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகி பாபு(கோலமாவு கோகிலா)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர்.டி.ராஜசேகர் (இமைக்கா நொடிகள்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – ஆரவ் ரவி