சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் திடீரென நீல நிறமாக மாறியது. கடற்கரையில் இருந்த சிலர் இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினர்.

முதலில் இது ஏதோ ஜிமிக்ஸ் வேலை என்று தான் மக்கள் கருதினர். ஆனால் அதன் பிறகு தான் உண்மையிலேயே திருவான்மியூர் பகுதியில் கடல் நீல நிறமாக ஜொலித்தது தெரியவந்தது. இதனை பலரும் புகைப்பட ஆதாரங்களுடன் பரப்ப ஆரம்பித்தனர்.

Tamil Girls Chat Room

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்​ந்தனர்.

கடல் நீல நிறமாக மாறியதற்கான காரணம் தெரியவில்லை. சிலர் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போவதாக புரளியை கிளப்பினர். இதனால் மக்கள் அதிர்ச்சியிலேயே வீடுகளுக்கு சென்று உறங்கினர்.

இச்சம்பவத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.