பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை விட தற்போது உள்ள சீசன் சுவாரசியம் குறைவு என்று கூறிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இப்போது மெய்மறந்து காணப்படுகின்றனர் என்றே கூறலாம்.

சரவணனின் வெளியேற்றம், மதுமிதாவின் தற்கொலை முயற்சி என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

Tamil Girls Chat Room

இதில் இன்றும் பள்ளிக்கூட டாஸ்க் தொடர்கின்றது. இதில் நேற்றைய தினத்தில் பயங்கரமாக ஆட்டம் வனிதா இன்று சற்று அமைதியாக காணப்படுகின்றார். சாண்டியால் ஒட்டுமொத்த பிக்பாஸ் பள்ளியே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மறுபடியும் வனிதா, கஸ்தூரி சண்டை ஆரம்பமாகியுள்ளது.

அதுவும் சமையலறையில் வைத்து இவர்களின் சண்டை ஓடிக்கொண்டிருக்க மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளியே விலங்குகளாக மாறி அசத்தியுள்ளனர்.

சேரன் உட்பட அனைவரும் விலங்குகளாக மாறி செய்த செயல் காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. கஸ்தூரியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் வனிதாவின் சண்டை கடைசியில் என்னவாகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.