நள்ளிரவில் உறவுக்கு அழைத்துவிட்டு துணை தூங்கியதால் ஆத்திரத்தில் பெண் எடுத்த முடிவு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸியைச் சேர்ந்தவர் தைஜா ரஸ்ஸெல். இவருக்கும் அதே மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் உறவு இருந்துள்ளது. அண்மையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்துவிட்டார். இது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

Tamil Girls Chat Room

இதனால் தைஜா கண்டபடி திட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்படியிருந்தும் அவர், தூங்குவதில் தீவிரமாக இருந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறியும் அவரால் அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த தைஜா, தனது துணை தூக்கத்தை விட்டு பதறி அடித்துகொண்டு வெளியேறும்படி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார்.

இதையடுத்து பெட்ரோலை வாங்கிய அவர், தனது துணை தூங்கி கொண்டிருந்த வீட்டின் மேலே ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது திடீரென விழித்து கொண்ட அந்த இளைஞர், வீடு பற்றி எரிவதை கண்டறிந்து வீட்டு மர ஜன்னலை உடைத்துகொண்டு வெளியேறியதில் உயிர் தப்பியுள்ளார்.இந்த சம்பவம் காலை நான்கு மணியளவில் நடந்துள்ளது.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கு தகாத உறவு இருந்ததும், அவர்தான் உடலுறவுக்கு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு தூங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த கோபத்தில்தான் தைஜா இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.