பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் தற்கொலை முயற்சி செய்ததாக கூறி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேறியதற்கான காரணம் குறித்து பல வதந்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் மதுமிதா மீது பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக நேற்று பொலீசில் புகார் கொடுத்திருந்தது.

Tamil Girls Chat Room

இந்நிலையில், மதுமிதா தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

அதில், பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை தற்போது என்னால் தெரிவிக்க முடியாது. நான் இன்னும் விஜய் தொலைக்காட்சி எனக்கு போட்ட அக்ரிமெண்ட் படி தான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். ஆனால் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் ஏன் இப்படி ஒரு பொய் புகார் கொடுத்துள்ளது என்று எனக்கு தெரியவில்லை.

எங்களது பேமண்ட், குறித்து நான் இன்வாய்ஸ் கொடுத்திருக்கிறேன், அவர்களும் சீக்கிரம் கொடுத்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர். இப்படி ஒரு பிரச்சனை ஏன் எழுந்தது என்று தெரியவில்லை. விஜய் தொலைக்காட்சியிடம் தொடர்பு கொள்ள நான் முயன்றேன். ஆனால் முடியவில்லை.

இந்த பிரச்சனை குறித்து, அவர்கள் ஏதாவது இண்டெர்வியூ ஏற்பாடு செய்தால் பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்து மிகவும் தெளிவாக பேசலாம் என்று கூறியுள்ளார்.