பட்ஜெட் டாஸ்கில் தர்ஷன் மற்றும் சாண்டி இருவரும் சற்று பொறுப்புடன் இருந்து இருக்க வேண்டும்.

பிக் பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, கஸ்தூரி மற்றும் வனிதாவின் சண்டை பெரிதாக மாறி இருந்தது.

Tamil Girls Chat Room

இந்த சண்டைக்கு முடிவு வரும் நேரம் எப்போது என்று வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இதற்கு இடையில், பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களின் பள்ளி பருவத்திற்கே மீண்டும் சென்றனர். சேரன் மற்றும் கஸ்தூரி இருவரும் பள்ளி ஆசிரியார்களாக இருந்தனர்.

கஸ்தூரியை, சாண்டி “இவர் “ஸ்கூல் ஆசிரியர் இல்லை, ஆயா ” என கூறி கேலி செய்தனர். மேலும், வீட்டின் கார்டென் ஏரியாவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் தங்களின் விருப்பமான ஆசிரியர்களை பற்றி கூற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து, அனைவரும் பேசியபோது கஸ்தூரி ” புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெற்று உள்ள தனது மகள் தான் எனக்கு விருப்பமான மற்றும் சிறந்த ஆசான் என்று தெரிவித்தார் “. அந்த சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் கவலையில் இருந்தனர்.

ஆனால், “சாண்டி மற்றும் போட்டியின் டைட்டில் வின்னராவர் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் இருவம் சிரித்துக்கொண்டு இருந்தனர்.”

கஸ்தூரியை இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அந்த சமயத்தில் இவர்கள் அது போன்று நடந்து இருக்கக் கூடாது என்பது நேயர்களின் கருத்தாக உள்ளது.