இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கணவனை படுக்கை அறையில் வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்த மனைவி, நடந்தவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நல்லோஸ்பரா பகுதியில் குடியிருந்து வந்தவர் 36 வயதான சுனில் கடம். இவரது மனைவி 33 வயதான ப்ரனாளி.

Tamil Girls Chat Room

கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 7 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில், சுனிலுக்கும் மனைவி ப்ரனாளிக்கும் சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது. தங்கள் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்தபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த சுனிலை, சமையல் கத்தியால் அவரது மனைவி ப்ரனாளி சரமாரியாக குத்தியுள்ளார்.

சத்தம் போடக் கூடாது என்பதற்காக சுனிலின் தொண்டையை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் சுனில் உயிரிழந்தார். பின்னர் வெளியில் வந்த ப்ரனாளி, வீட்டுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார், மாமியாரை எழுப்பி, சுனில் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்’ எனக் கூறிவிட்டு அழுது நாடகமாடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் ஒருவர் எதற்காகத் தன்னைத் தானே இத்தனை முறை கத்தியால் குத்த வேண்டும் என்ற சந்தேகம் காவலர்களுக்கு எழுந்துள்ளது.

தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய ப்ரனாளி, காவலர்களின் விசாரணையில் முதலில் சிக்கிக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், தன் கணவர், வேறு ஒரு பெண்ணுடன் நட்பு வைத்திருந்ததால் அதைக் கண்டுபிடித்துக் கண்டித்தேன்.

அவர் கேட்காததால் அதற்குப் பழிவாங்கவே கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ப்ரனாளி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குழந்தைகள் இருவரும் சுனிலின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.