சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாற்காலியில் இருந்து எழுந்து நிற்க முயன்ற விஜயகாந்த் திடீரென தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சில காலமாக உடல்நலப்பிரச்சனை இருந்து வருகிறது.

Tamil Girls Chat Room

அவரால் தனியாக கூட நடக்க முடியாத நிலையில் எப்போதும் அவருடன் இரண்டு பேர் உடன் இருக்க வேண்டும் என நிலையே உள்ளது.

இந்நிலையில் நாளை விஜயகாந்த் பிறந்தநாள், இதையடுத்து கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவருடன் வழக்கம்போல, பிரேமலதாவும், சுதீஷூம் உடன் வந்திருந்தனர்.

அலுவலகத்தில் திரண்டு வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்க எழுந்து நின்றார். ஆனால் யாருமே அவருக்கு உதவாத காரணத்தினாலோ என்னவோ, திடீரென நிலைதடுமாறி விழுந்துவிட்டார்.

இதை பார்த்து, அங்கிருந்த எல்லோருமே பதைபதைத்து விட்டனர்.

பிறகு உடனடியாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரேமலதாவும், பார்த்தசாரதியும் அவரை தூக்கி விட்டனர்.

இருந்தாலும், எப்படியெல்லாம் பார்த்து பூரித்து போன கேப்டனை இப்படிப் பார்த்ததும், தொண்டர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்து கண்கலங்கியதை காண முடிந்தது.