பிரித்தானியாவில் திருமணத்தின் போது நிர்வாணமாக தான் இருக்கும் புகைப்படத்தை வேனில் ஒட்டிய மணமகன் அதை மணப்பெண்ணிடம் காட்டிய நிலையில் அவர் அதிர்ச்சியும் அதே நேரத்தில் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.

Bucknall-ஐ சேர்ந்தவர் பவுல் டாப்பர் ஸ்மித். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டவுன் என்ற பெண்ணை கடந்த 2018 புத்தாண்டு அன்று சந்தித்த பவுல் அவருடன் நட்பானார்.

Tamil Girls Chat Room

பின்னர் அதே ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

எல்லா விடயத்திலும் தனித்துவமாக தெரியவேண்டும் என நினைக்கும் பவுல், தனது மனைவிக்கு வித்தியாசமான சர்ப்பரைஸ் கொடுக்க நினைத்தார்.

அதன்படி தனக்கு சொந்தமான வேனில் புல்வெளியில் தான் நிர்வாணமாக படுத்திருக்கும் பெரிய புகைப்படத்தை ஸ்டிக்கராக ஒட்டி திருமணம் நடைபெறும் இடத்தில் நிறுத்தினார்.

பின்னர் தனது மனைவியை வேன் அருகில் அழைத்து வந்து அதை காட்டினார்.

இதை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த டவுன் சிறிது நேரம் வாயடைந்து போனார்.

இது குறித்து டவுன் கூறுகையில், அவர் இப்படி செய்வார் என நினைக்கவில்லை, பவுல் செய்த விடயத்தை சிலர் விமர்சித்தாலும் இதை வித்தியாசமான மற்றும் தனித்துவமான விடயமாகவே கருதுகிறேன்.

வேனில் உள்ள புகைப்படத்தை திருமணத்துக்கு வந்தவர்கள் பார்த்து சிரிக்கவும் செய்தார்கள் என கூறியுள்ளார்.