தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரான விஜயகாந்தின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரது மகன்கள் பிறந்தநாள் பரிசு ஒன்றை கொடுத்து நெகிழ்ச்சிபடுத்தியுள்ளனர்.

திரைப்பட நடிகராக பல உயரத்திற்கு சென்ற விஜயகாந்த், அதே வேகத்தில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கினார்.

Tamil Girls Chat Room

ஆரம்ப கால கட்டத்தில் ஒரு எதிர்கட்சியாக வளர்ந்து வந்த தேமுதிக, அதன் பின் விஜய்காந்தின் அதிரடி முயற்சியால் ஒரு மிகப் பெரிய கட்சியாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் பெரிய கட்சிகள் எல்லாம் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க போட்டி போட்டன. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில தேர்தல்களில் தனித்து நின்ற தேமுகதிவிற்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.

அதுமட்டுமின்றி விஜய்காந்தின் உடல்நிலை தோய்வு போன்றவையால் தேமுதிக கட்சி தற்போது அதாளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

இதை மீட்பதற்காக அவரது மனைவி பிரேமலதா முயற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் தன்னுடைய 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவர் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அண்ணதானமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு விஜய்காந்த முன்னிலையில் திருமணமும் நடைபெற்றது.

அதன் பின் விஜயாந்தின் பிறந்தநாளிற்கு அவரது மகன்கள் சண்முக பாண்டி மற்றும் விஜய்பிரபாகர் BMW காரை பரிசாக வழங்கினர். அந்த BMW காரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது