இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 17 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் அரசு டிபி மருத்துவமனை உள்ளது. இங்கு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு Ward boy சிவானந்தன் என்பவர், ‘ஊசி போட வேண்டும், கீழே உள்ள அறைக்கு வாருங்கள்’ என குறித்த இளம்பெண்ணை அழைத்துள்ளார்.

Tamil Girls Chat Room

அப்போது தனது தாயையும் அழைத்து வருவதாக அப்பெண் கூறியுள்ளார். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிய சிவானந்தன், கீழே உள்ள அறைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று மாத்திரை ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன் உட்கொண்ட குறித்த பெண் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிவானந்தனும், மருத்துவமனையில் பணியாற்றும் விஷால் என்பவரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்ததும், தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அப்பெண் கூறியுள்ளார். உடனே பெண்ணின் தாயார் போலீஸ் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மருத்துவ ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையிலேயே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.