டோனி-கங்குலியின் சாதனையை முறியடித்து அசத்திய கோஹ்லி! என்ன தெரியுமா?

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணித்தலைவர் எனும் முன்னாள் அணித்தலைவர் டோனியின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார்.

ஆன்டிகுவா மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது.

Tamil Girls Chat Room

இந்திய அணி நிர்ணயித்த 419 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 100 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 308 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 60 புள்ளிகளை பெற்றுள்ளது.

அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணித்தலைவர் என்ற டோனியின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார்.

AP

டோனி 60 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயல்பட்டு 27 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். கோஹ்லியும் 27வது டெஸ்ட் வெற்றியை அணித்தலைவராக பதிவு செய்துள்ளார்.

ஆனால், கோஹ்லி 47 போட்டிகளில் 27 வெற்றிகளைப் பெற்று, டோனி மற்றும் கங்குலி ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னாள் அணித்தலைவர் கங்குலி 21 வெற்றிகளை பெற்றுள்ளார். மேலும், அந்நிய மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற அணித்தலைவர் என்ற கங்குலியின்(11 வெற்றி) சாதனையையும், கோஹ்லி (12 வெற்றி) முறியடித்துள்ளார்