தமிழகத்தில் ஒரே இரவில் தாய், மகள்களை கொலை செய்துவிட்டு உடல்களுடன் தவறாக நடந்து கொண்ட கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் இருக்கும் வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு போலிசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.

Tamil Girls Chat Room

இதனால் அங்கு விரைந்து வந்த போலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ளே 4 பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடந்தனர்.

அதன் பின் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலிசார் , இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் பாண்டியம்மாள், அவரின் மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா எனத் தெரியவந்தது.

இந்த கொலைக்கு முக்கிய காரணம் கூடா நட்பு தான் என்பதை கண்டுபிடித்த போலிசார் , இது தொடர்பாக ஸ்வீட் மாஸ்டர் உதயனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பாண்டியம்மாளின் சொந்த ஊர் காரைக்குடி திருப்பத்தூர்- கட்டையாம்பட்டி கிராமம்.

பாண்டியம்மாளின் கணவர் சின்ராஜ். கருத்துவேறுபாடு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் 3 பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பாண்டியம்மாள், காரைக்குடியில் உள்ள ஸ்வீட்ஸ் கடைக்கு வேலைக்குச் சென்றார்.

அங்கு தான் உதையனை அவர் சந்தித்துள்ளார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது உதயன் உன்னை மற்றும் 3 குழந்தைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற, அவரின் பேச்சை நம்பி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாள், அவரின் குழந்தைகள் மற்றும் உதயன் சென்னைக்கு வந்து, ராயப்பேட்டை முத்து தெருவில் கணவன்-மனைவி என்ற அறிமுகத்துடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

அதன் பின் உதயன், சென்னையிலும் ஸ்வீட்ஸ் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்துவந்துள்ளார். குழந்தைகளின் படிப்பு மற்றும் சில காரணங்களுக்காக உதயன், பாண்டியம்மாளின் கணவரின் பெயரான சின்ராஜ் பெயரில் வாழத் தொடங்கினர்.

உதயன்

இதன் காரணமாகவே சின்ராஜ் என்கிற உதயன் என்ற பெயரில் ஆவணங்கள் இருந்தன. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை எந்த பிரச்னை இல்லாமல் சென்ற நிலையில், திடீரென்று உதயன் பாண்டியம்மாளின் மகள் ஒருவரிடம், என்னை நீ கல்யாணம் செய்துகொள்கிறாயா? என்று கேட்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியம்மாள், அவரை வீட்டு விட்டு துரத்தியுள்ளார்.

இருப்பினும் உதயன் வீட்டிற்கு வெளியிலே தங்கி வந்ததால், அவ்வப்போது குடும்பச் செலவுக்காகப் பணம் கொடுத்து வந்துள்ளார.

அப்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரவு நேரம் வாசலில் படுத்திருந்த உதயன் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து, பாண்டியம்மாள், மகள்கள் மூன்று பேரையும் அம்மி கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பின் இறந்து கிடந்த பாண்டியம்மாள் மகள்களிடம் உதயன் தவறாக நடந்து கொண்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், நீதிபதி மஞ்சுளா குற்றவாளி உதயனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அப்படி அபாராத தொகையை கட்டவில்லை என்றா, அதற்கு பதிலாக மேலும் 2 ஆண்டுகள் சிறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.