நடிகை வித்யா பாலன் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் வறுபுறுத்தி கேட்டதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக முன்பே தெரிவித்திருந்தார் அவர்.

இந்நிலையில் சென்னையில் வித்யா பாலனிடம் ஒரு இயக்குனர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tamil Girls Chat Room

“எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது சென்னையில் இருந்தேன். ஒரு இயக்குனர் சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவர் ‘நிறைய பேசணும்.. ரூமுக்கு போவோம்’ என ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன், வெறும் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்றுவிட்டார்” என வித்யா பாலன் கூறியுள்ளார்.