பிரித்தானியரான ஒரு பெண் புதிதாக குடிபுகுந்த ஒரு வீட்டில் வித்தியாசமான பல விடயங்கள் நிகழ்வதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Brightonஇலுள்ள அந்த வீட்டில் Claudia Connell என்னும் அந்த பெண் சுமார் ஒரு வருடம் வாழ்ந்த நிலையில், அந்த வீட்டில் பல பொருட்கள் காணாமல் போவதும், சுவரில் மர்ம ஓவியங்கள் தோன்றுவதும், சிவப்பு பெயிண்டில் தோய்த்த தூரிகை ஒன்று திடீரென சமையல் அறையில் தோன்றுவதும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

Tamil Girls Chat Room

இரவுகளில் யாரோ கதவைத் தட்டுவது போல் சத்தம் கேட்குமாம், கதவைத் திறந்தால் யாரும் இருக்க மாட்டார்கள்.

திடீரென வீட்டுக்குள் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பது போல் இருக்கும். இது ஓராண்டு வரை தொடர, ஆவிகள் இருக்கும் வீடுகளை ‘சுத்தம் செய்யும்’ Emma Loveheart என்ற பெண்ணின் உதவியை நாடியிருக்கிறார் Claudia.

ஆவிகள் குறித்து அறியும் சக்தியுடைய Emma Loveheart, அந்த வீடு முழுவதும், எதிர்மறை சக்திகள் பல இருப்பதை நிறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

அத்துடன் ஒரு ஆவி அங்கிருப்பதையும், அதுதான் அவ்வளவு தொல்லைகளையும் அளித்து வந்ததாக தெரிவித்த Emma அந்த வீட்டை 15 நாட்கள் சுத்தப்படுத்தியிருக்கிறார்.

எந்த வீட்டில் பேய்த்தொல்லை இருந்ததோ அதே வீட்டில் தான் இப்போது மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளார் Claudia. பேய் வாழ்ந்த வீட்டிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்கிறார் Claudia.