ஆபாச பட நடிகருடன் தன்னை சேர்த்து வைத்து அவதூறாக சித்தரித்த தமிழ் திரைப்பட குழுவினருக்கு சாமியார் நித்தியானந்தா legal notice அனுப்பியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்ததாக வெளியான வீடியோவை அடுத்து சாமியார் நித்தியானந்தா பெரும் பரபரப்புக்கு உள்ளானார்.

Tamil Girls Chat Room

இதன் பின்னர் மதுரை ஆதின மடத்தின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் மீதி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு நடிப்பில் பப்பி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.

அதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தாவின் படமும், இன்னொரு பக்கத்தில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சி ஏற்கனவே போலிசில் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயத்தில் நேரடியாக சம்மந்தப்பட்ட சாமியார் நித்தியானந்தா, பப்பி திரைப்படத்தின் முன்னோட்டத்தில் தன்னை அவதூறாக மற்றும் மனதை புண்படுத்தும் விதத்தில் சித்தரித்துள்ளார்கள் என்று கூறி படக்குழுவினருக்கு legal notice அனுப்பியுள்ளார்.

இதை பப்பி படக்குழுவினர் சட்டரீதியாக சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.