இந்தியாவில் மாமியார் மருமகனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்காண்ட் மாநிலத்தின் கோடேர்மா மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில், மாமியார் ஒருவர் தன் மருமகன் சரியில்லை என்று அந்த கிராமத்தில் இருக்கும் சில பெண்களிடம் கூறியுள்ளார்.

Tamil Girls Chat Room

இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி இது குறித்து அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், மருமகனைப் பற்றி தவறாக கூறிய மாமியாரை அடித்த தலைவர்கள, அவரின் முடியை கத்திரியால் வெட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் 22 வயது மருமகன் சந்தீப் ஷா தன் கணவர் இல்லாத இந்த 3 மாதங்கள் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், அதைப் பற்றி நான் கூறிய போது, இவர்கள் இப்படி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் 11 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.