உடலில் மாற்றங்கள்
வயதானவர்களின் உடல் தோல் வெளுத்த நிறத்தில் மாறுதல், கருப்பு நிறத்தில் புள்ளிகள் போன்ற தழும்புகள் கால், கை, முகத்தில் தோன்றுதல் மற்றும் பற்களில் கருப்பு கறைகள் படிந்தாலோ மரணம் நெருங்குவதாக அர்த்தம்.
வெளியுலக தொடர்பு குறைவது
விரைவில் மரணிக்க போகிறவர்கள் வீட்டை விட்டு அல்லது தாங்கள் படுத்திருக்கும் படுக்கையை விட்டு எளிதில் வெளியேற மறுப்பார்கள்.
இதோடு அவர்களின் மனநிலை மற்றும் நடத்தையிலும் மாறுதல் ஏற்படலாம். எடுத்துக்காட்டுக்கு, கடவுள் மறுப்பாளராக வாழும் ஒருவர் திடீரென ஆன்மீக போதனைகள் குறித்து பேசலாம்.
பசியின்மை மற்றும் எடை குறைதல்
இறக்க போகும் மனிதருக்கு சத்துக்கள் இனி தேவையில்லை என உடலானது புரிந்து கொள்வதால் அவர்களுக்கு பசிக்காது, இதன் காரணமாக உடல் எடையும் வேகமாக குறையும்.
உணர்ச்சி வெளிப்பாட்டில் மாற்றம்
விரைவில் உயிரிழக்க போகிறவர்கள் விடுமுறைக்கு வெளியில் செல்வது, தொலைதூர பயணம் மேற்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து அதிகம் பேசுவார்கள்.
மேலும், தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வார்கள்.
கோரிக்கை வைப்பது
மரணத்தின் அருகில் இருப்பவர்கள் தங்களின் கடைசி ஆசையாக சில இடங்களுக்கு போக வேண்டும், தங்களுக்கு பிடித்த நபர்களுடன் பேச வேண்டும், பிடித்த இசையை கேட்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைப்பார்கள்