இங்கிலாந்தில் கழிவறைக்கு சென்ற ஒரு பெண் அங்கு கண்ட காட்சியால் பயந்து நடுங்க, அவரது கணவரோ கழிவறைக்கு செல்லவே பயந்து இனி அங்கு போகவே மாட்டேன் என்கிறாராம்.
அப்படி என்ன இருந்தது கழிவறையில்?
Southamptonஐச் சேர்ந்த Richard Grant (45), கழிவறைக்குச் சென்ற தன் மனைவி திடீரென அலறியபடி ஓடிவர, அப்படி என்ன அங்கு இருக்கிறது என்று பார்க்கச் சென்றிருக்கிறார்.
கழிவறைக்குள் சென்று பார்த்தால் நான்கு அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்திருக்கிறது.
விலங்குகள் நல அமைப்பை அழைத்தால் அன்றைக்கு பார்த்து அங்கு யாரும் இல்லை.
ஒரு இரவு முழுவதும் கழிவறையில் பாம்புடனேயே பயத்துடன் செலவிட்டிருக்கிறது Richardஇன் குடும்பம்.
பயந்துபோன Richardக்கு பின்னர் தனது நண்பர் Cornell Collins ஞாபகம் வந்திருக்கிறது.
Collins தனது வீட்டில் ஒரு பாம்பை வளர்த்து வருகிறார். எனவே Collinsஐ Richard அழைக்க, அவர் வந்து எளிதாக ஒரு ஷூ லேஸினால் பாம்பைப் பிடித்திருக்கிறார்.
பத்திரமாக அதை செல்லப்பிராணிகள் விற்கும் கடை ஒன்றில் கொண்டு கொடுத்திருக்கிறார் Collins.
ஆனால் இப்போதும் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றாலே, தான் பயந்து நடுங்குவதாகத் தெரிவிக்கிறார் Richard.