அமேசான் காடு என்று விளம்பரத்தில் மட்டும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது காட்டுத்தீ பரவி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவதார் படத்தில் நடந்த அதே கொடுமை தற்போது அமேசான் காட்டில் நடந்து உள்ளது.

கடந்த 3 வாரங்களாக அமேசான் காடு எரிந்து கொண்டிருக்கிறது. அதில் வாழும் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கிறது, உலகின் 20% ஆக்ஸிஜன், மில்லியன் கணக்கான உயிரினங்களை, தாவரங்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது.

Tamil Girls Chat Room

பூமி இறந்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பேரழிவினால் காட்டில் வாழும் உயிரினங்கள் எரிந்த நிலையில் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அழிவிற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று செய்தி வெளியாகியுள்ளதை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. அது என்னவென்றால் இந்த காட்டில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டும் என்பதே கார்ப்பரேட் நிறுவனங்களின் குறிக்கோள்.

அங்குள்ள காடுகளில் எண்ணை வளம் மிகுந்ததாக இருப்பதால் அதனை வெளியே எடுக்கும் குறிக்கோள் கொண்டு செயல்பட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த பழங்குடியினர் வழக்கு ஒன்று போட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அடுத்த ஓரிரு வாரங்களில் அமேசான் காடு தீப்பிடித்து எரிகிறது.

இதை வைத்து பார்க்கும் உலக சமூக ஆர்வலர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் இந்த செயல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கான சான்று கீழே உள்ள ட்விட்டர் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காடுகளை அழித்து விட்டால் மனித இனம் அழிந்துவிடும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் உணர்வதற்கான வாய்ப்பு இல்லை. உலகை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு உலகநாடுகள் கைகோர்த்து மீண்டும் இயற்கை வளங்களை சரி செய்ய வேண்டும்.