விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் கவீனும் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம்.
இதைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை தாண்டி இருந்து வரும் இவர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தற்போது சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் ராஜ். இவரது தாய் ராஜலட்சுமி என்கிற ராஜி, சொர்நாதன், அருணகிரிநாதன், தமயேந்தி, ராணி ஆகியோர் சேர்ந்து கூட்டாக ஏலச்சீட்டு நடத்தியதாகவும், வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் நடிகர் கவின்ராஜ் குடும்பத்தினர் கடந்த 2007ம் ஆண்டு மொத்தமாக தலைமறைவாகிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 29 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து தற்போது சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.