மதிகேரேவில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் ஹுச்சா வெங்கட்டை பொதுமக்கள் சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், கன்னட நடிகருமான ஹுச்சா(மென்ட்டல்) வெங்கட் கர்நாடக மாநிலம் மதிகேரேவுக்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த வெங்கட் சாலையில் சென்றவர்களை திட்டியடதுடன், வாகனங்கள் மீது கற்களை வீசினார்.
அப்பொழுது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு வந்த திலீப் என்பவரை வெங்கட் அடித்தார். மேலும் கே.எஸ்.ஆர்.டி.சி டிப்போ முன்பு நின்று கொண்டிருந்த திலீப்பின் கார் வின்ட்ஷீல்டை அவர் உடைத்தார்.
ಮಡಿಕೇರಿಯಲ್ಲಿ ಹುಚ್ಚ ವೆಂಕಟ್ ಒದೆ ತಿನ್ನಲು ಇದೇ ಕಾರಣ..? #HucchaVenkat #Madikeri pic.twitter.com/bUuL8M7yQE
— Kannada Videos (@OneindiaKaVideo) August 30, 2019
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹுச்சா வெங்கட்டை அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கட்டை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து கார் உரிமையாளர் திலீப் கூறியதாவது, என்னை ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறாய், உனக்கு நான் யார் என்று தெரியுமா என வெங்கட் என்னிடம் கேட்டார். நீங்கள் வெங்கட் தானே என்று கேட்டேன்.
உடனே அவர் என்னை அறைந்ததுடன், காரணமே இல்லாமல் என் கார் கண்ணாடிகளை உடைத்தார் என்றார்.
நடிகரும், இயக்குநருமான ஹுச்சா வெங்கட் கன்னட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பிரபலமானார். அவர் சக போட்டியாளரான ரவியை தாக்கியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.