மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், கணேஷ். மென்பொருள் பொறியாளரான இவருக்குத் திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணேஷ் தம்பியின் செல்போனுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு மெசேஜ் வந்துள்ளது.

நாங்கள், எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் என அதில் இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் பதறியடித்து கொண்டு கணேஷ் வீட்டுக்கு சென்ற நிலையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

Tamil Girls Chat Room

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, கணேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் அதிக ரத்தம் வெளியேறி சடலமாகக் கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் இருவரின் சடலத்தையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணேஷ் சகோதரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதற்கான சிகிச்சைகள் எடுத்துவந்தார் என்றும் தெரியவந்தது.

இதனிடையில் கணேஷ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.

அதில், விருஷாலியை அதிகமாக நேசித்தேன். கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் வலியையும் கதறல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

போலீஸார் கூறுகையில், சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார் கணேஷ். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்