அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனையான ஜெஸ்ஸி கோம்ப்ஸ், சாதனையை முறியடிக்க ஆசைப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் வகை கார் பந்தயத்தில் வேகமான வீராங்கனையாக அறியப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸி கோம்ப்ஸ்(39). ரிவி பிரபலமாகவும் இருந்த இவர், அதிக வேகத்தில் கார் ஓட்டிய பெண் ஓட்டுநர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Tamil Girls Chat Room

கடந்த 2013ஆம் ஆண்டு 641 கிலோ மீற்றர் வேகத்தில் காரை ஓட்டி இந்த சாதனையைப் படைத்தார். எனினும் அந்த சாதனையை தானே முறியடிக்க வேண்டும் என்று பலமுறை முயற்சித்துள்ளார்.

ஏற்கனவே ஒருமுறை 777 கிலோ மீற்றர் வேகத்தில் காரை செலுத்தியிருந்தார் ஜெஸ்ஸி. ஆனால், அப்போது சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமல் போனது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின் ஆல்வார்ட் வறண்ட ஏரிப் பகுதியில் மீண்டும் ஒரு சாதனையை முயற்சியை ஜெஸ்ஸி மேற்கொண்டுள்ளார்.

Frederick M. Brown/Getty Images

காரை மிக வேகமாக செலுத்திய ஜெஸ்ஸி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார். செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் அவர் பலியானார்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்று அறியப்படாத நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1976ஆம் ஆண்டு, கிட்டி ஓ நெயில் என்ற வீராங்கனை மூன்று சக்கர ஜெட் காரை 824 கிலோ மீற்றர் வேகத்தில் இயக்கி சாதனை செய்துள்ளார். அதனை முறியடிக்க வேண்டும் என்ற ஆவலும் ஜெஸ்ஸிக்கு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.