140 கிலோ எடை.. 6.5 அடி உயரம்.. இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பிரம்மாண்ட வீரர்!

மேற்கிந்திய தீவுகளில் அணியில் அதிக எடை கொண்ட ஆல்ரவுண்டர் வீரர், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அறிமுகமானார்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, கிங்ஸ்டனில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

Tamil Girls Chat Room

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் 6 அடி 5 அங்குலம், 140 கிலோ எடை கொண்ட ஆல்-ரவுண்டர் வீரர் ரஹீம் கார்ன்வல்(26) என்பவர் அறிமுகமானார். அந்த அணியின் 319வது டெஸ்ட் வீரராக அவர் களமிறங்கினார்.

டெஸ்டில் அதிக எடை கொண்ட வீரராக அறியப்படும் இவர், நேற்றைய போட்டியில் இந்திய வீரர் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்டில் தனது விக்கெட் கணக்கை தொடங்கினார்.

லீவார்ட் தீவுகள் அணிக்காக முதல் தர 55 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹீம், 2224 ஓட்டங்களுடன் 260 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சிறந்த ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியதால் இவர் கவனிக்கப்பட்டார்.

இதற்கு முன்பு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ராங் 133 முதல் 139 கிலோ வரை எடை கொண்டிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.