கோடீஸ்வரரை மகிழ்விப்பதற்காக இளம்பெண்களுக்கு பயிற்சியளித்த பெண்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

பருவம் அடையாத இளம்பெண்கள் ஏராளமானோரை சீரழித்ததோடு, அவர்களை பல பெரும்புள்ளிகளுக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரர் எப்ஸ்டீனை மகிழ்விப்பதற்காக, இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெண்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருவம் அடையாத இளம்பெண்கள் ஏராளமானோரை சீரழித்த எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் உண்மையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரை உயிருடன் விட்டால், பல பெரும்புள்ளிகளின் பெயர் வெளியே வந்துவிடும் என்பதனால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

Tamil Girls Chat Room

இதற்கிடையில் அவர் மரணமடைந்து விட்டதால் தாங்கள் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பலரது எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது.

எப்ஸ்டீன் மீது புகாரளித்த, அவரது பாலியல் அடிமையாக இருந்த விர்ஜினியா ராபர்ட்ஸ், எப்ஸ்டீன் மட்டும் இதை தனியாக செய்யவில்லை, அவருக்கு பலர் உடந்தையாக இருந்தார்கள், அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரியிருந்தார்.

அந்த வகையில் தற்போது சிலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.

அதிர்ச்சிக்குரியவிதமாக அவர்கள் அனைவரும் பெண்கள்! சொல்லப்போனால், எப்படி எப்ஸ்டீனுக்கு பாலியல் இன்பம் கொடுப்பது என்று சிறுமிகளுக்கு பயிற்சியளித்தவர்கள் அவர்கள்.

வேலைக்கு ஆள் எடுப்பது போல் இளம்பெண்களை ஈர்க்கும் இந்த பெண்கள், அந்த சிறுமிகளையும் இளம்பெண்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் தள்ளியிருக்கிறார்கள்.

அப்படிப்பார்த்தால், அவர்களும்தான் அந்த இளம்பெண்களை சீரழித்தவர்கள். ஆனால், எப்ஸ்டீனுடனான ஒரு ஒப்பந்தத்தின்படி அவர்களை ப்ளோரிடாவில் விசாரிக்க முடியாது.

அதனால் தாங்கள் தப்பி விடுவோம் என்று அந்த பெண்கள் எண்ணியிருக்க, பொலிசார் அதற்கும் ஆப்பு வைத்திருகிறார்கள்.

ப்ளோரிடாவில்தானே விசாரிக்க முடியாது, வேறு மாகாணங்களில் விசாரிக்கலாமே, ஆகவே நியூயார்க் பொலிசார் களமிறங்கியிருக்கிறார்கள்.

தற்போது அவர்களுடைய இலக்கு Nadia Marcinkova, Lesley Groff, Sarah Kellen மற்றும் Adriana Ross என்னும் நான்கு பெண்கள்.

இவர்கள்தான் அத்தனை இளம்பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி எப்ஸ்டீனிடம் சிக்க வைத்தவர்கள், அவருக்கு எப்படி இன்பம் கொடுப்பது என சிறுமிகளுக்கு பயிற்சியளித்தவர்கள்!

அழகான ஒரு கோடீஸ்வரர் இருக்கிறார், அவருக்கு மஸாஜ் செய்துவிட்டால் போதும், ஏராளமான பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டித்தான் இந்த பெண்கள், இளம்பெண்களையும் சிறுமிகளையும் குழியில் தள்ளியிருக்கிறார்கள்.

அதற்காக, இந்த நால்வரில் மூன்று பேருக்கு 200,000 டொலர்கள் வரை ஊதியத்துடன் ஆடம்பர உணவு முதலானவை கிடைத்திருக்கிறது.

இன்னொரு பெண்ணும் இருக்கிறார், அவரது பெயர் Haley Robson. அவரை நீதிபதி குற்றவாளி என அறிவிக்காததால் தற்போதைக்கு அவர் தப்பியிருக்கிறார்.

எப்ஸ்டீனுக்கு உதவி, பல இளம்பெண்களின் வாழ்வை அழித்து நன்மை அனுபவித்தவர்கள், தண்டனையும் பெறுவது நியாயம்தானே, பொலிசார் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதையடுத்து விரைவில் அவர்கள் சிக்க இருக்கிறார்கள்.