மனைவியின் தங்கை மீது ஆசை! எச்சரிக்கையை மீறி கணவன் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் மனைவியின் தங்கை மீது ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்ய நபர் ஒருவர் முயன்றதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் Ongole நகரை சேர்ந்தவர் நாகேந்திரா. இவருக்கு மாதவி, மெளனிகா உள்ளிட்ட மூன்று மகள்கள் உள்ளனர்.

Tamil Girls Chat Room

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் நாகேந்திரா வீட்டுக்கு சுதாகர் பாபு என்பவர் வாடகைக்கு குடிவந்தார்.

அப்போது மாதவியுடன் சுதாகர் நெருக்கமாக பழகிய நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இதையடுத்து நாகேந்திராவே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் மாதவியின் தங்கையும் தனது மைத்துனியுமான மெளனிகா மீது சுதாகரருக்கு ஆசை ஏற்பட்டதை தொடர்ந்து அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

தனது விருப்பத்தை மெளனிகாவிடம் கூற அவர் ஏற்கவில்லை, ஆனாலும் தொடர்ந்து அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் வந்தார் சுதாகர்.

இதையறிந்த மெளனிகாவின் பெற்றோர் சுதாகரை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

இனியும் அக்கா கணவரின் தொல்லையை பொறுக்க முடியாது என நினைத்த மெளனிகா மன உளைச்சலில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சுதாகர் தனது மனைவி மற்றும் மாமனாரிடம், நான் தான் மெளனிகா மரணத்துக்கு காரணம் என போலிசில் புகார் கொடுக்க கூடாது என மிரட்டினார்.

ஆனால் இதை பொருட்படுத்தாத சுதாகர் மனைவி மாதவி, கணவர் தான் தனது தங்கையின் சாவுக்கு காரணம் என போலிசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து போலிசார் மெளனிகாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.