சென்னையில் தாயின் கண்முன்னே லாரியில் அடிபட்டு மகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சையத் என்பவரின் மனைவி நஸ்ரின். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய 4 வயது மகன் முகமது உவைஸ் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

Tamil Girls Chat Room

நஸ்ரின் தினமும் அலுவலகத்திற்கு செல்லும்போது முகமதுவை, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறக்கிவிடுவார்.

இந்த நிலையில் வழக்கம் போல மகனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நஸ்ரின் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நஸ்ரின் லேசான காயங்களுடன் உயிர்தப்பி விட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய மகனின் தலை மீது லொறியின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது உயிரிழந்துள்ளான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நஸ்ரின் கதறி அழ ஆரம்பித்துள்ளார். அதே சமயம் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற லொறி ஓட்டுநரை சுற்றி இருந்த மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த போலீஸார், லொறி ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.