உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் இருவரையும் வீட்டில் அடைத்துவிட்டு காதலனோடு ஊர் சுற்றிக்கொண்டிருந்த தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த 23 வயதான விளாடிஸ்லாவா ட்ரோகிம்சுக் என்கிற தாய், தன்னுடைய ஒருவயது மகன் டேனில் மற்றும் மூன்று வயது மகள் அன்னா ஆகியோரை 11 நாட்கள் வீட்டில் அடைத்துவிட்டு, புதிய காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக கிளம்பியுள்ளார்.

Tamil Girls Chat Room

அந்த நாட்களில் உணவு, தண்ணீர் இல்லாததால் பெரும் அவஸ்தையடைந்த அந்த இரண்டு குழந்தைகளும், அங்கிருந்த சுவரொட்டிகள் மற்றும் தங்களுடைய சொந்த வெளியேற்றத்தை சாப்பிட்டு நாட்களை கழித்துள்ளனர்.

11 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த விளாடிஸ்லாவா, குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பணம் திரட்ட முற்பட்டுள்ளார். இதற்கிடையில் டேனில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், திட்டமிட்டு வேண்டுமென்ற பட்டினிபோட்டு குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாக கூறி, விளாடிஸ்லாவாவை கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, விளாடிஸ்லாவாவிற்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

ஆனால் இதனை எதிர்த்து ஆயுள்தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக, குழந்தையின் தந்தை மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.