நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தக திமி தா, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.

இவர் திருமதி செல்வம், தென்றல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதோடு தொகுப்பாளராகவும் மக்களிடையே பிரபலமானவராக இருந்து வருகிறார்.

தீபக் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

அவர் தந்தை விட்டர் திகார் ராவ் மற்றும் தாய் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் விட்டலின் மனைவி கடந்த 26 -ஆம் தேதி கும்பகோணத்துக்கு சென்றார்.

இதனால் விட்டல் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விட்டல் மனைவி கும்பகோணத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை ஊர் திரும்பினார்.

அப்போது வீட்டில், விட்டல் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் விட்டல் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.