வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது அடித்த அதிர்ஷ்டம்…திடீரென இளைஞர் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

இங்கிலாந்தில் குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருக்கும் போது வந்த யோசனையில் லாட்டரி விளையாட்டில் ஈடுபட்ட 19 வயது இளைஞருக்கு பெரிய பரிசு கிடைத்துள்ளது.

சாம் லாடன் (19) என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

Tamil Girls Chat Room

இந்நிலையில் வீட்டு குளியலறையில் சாம் குளித்து கொண்டிருக்கும் போது அவருக்கு லாட்டரி விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதையடுத்து அங்கேயே தனது செல்போனில் நேஷனல் லாட்டரி செயலியை பதிவிறக்கம் செய்த சாம், அதற்கான கணக்கை தொடங்கி லாட்டரி விளையாட்டில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவருக்கு அதில் இரண்டாவது பரிசாக மாதம் £10,000 என ஒரு வருடத்துக்கு கிடைத்துள்ளது.

தரவு ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமுக்கு பரிசு விழுந்தது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாம் கூறுகையில், முதல் வேலையாக நியூ யோர்குக்கு சுற்றுலா செல்லவுள்ளேன், இதுவரை என் வாழ்நாளில் லாட்டரி விளையாட்டில் நான் ஈடுபட்டதேயில்லை.

ஆனால் எனக்கு தெரிந்த ஒருவருக்கு லாட்டரியில் பெரியளவில் பரிசு விழுந்தது. இதையடுத்தே நானும் விளையாடினேன்.

அதுவும் குளித்து கொண்டிருக்கும் போது விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது, இதில் எனக்கு பரிசு விழுந்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது, இதோடு முதலில் எனக்கு பரிசு விழுந்ததை என் மனைவி நம்பவேயில்லை, பின்னர் தான் நம்பினார் என கூறியுள்ளார்.