தாயின் வயிற்றிலிருந்து வந்ததும் இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல்: லைக்குகளை அள்ளும் வீடியோ

அமெரிக்காவில் பிறந்த சில நொடிகளில் இரட்டை குழந்தை செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ வைரலாகியுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Celi என்னும் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

Tamil Girls Chat Room

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த குழந்தைகள் தாயின் மார்பகத்தின்மீது படுக்க வைக்கப்பட்டதும், மூத்த குழந்தை, தங்கையின் கைகளை தேடி பிடித்துக் கொள்வதைக் காண முடிகிறது.

அதே நேரத்தில் தங்கையும் அக்கா தன் கையைப் பிடித்துக் கொள்வதற்காக விரல்களை விரித்துக் கொடுக்கிறாள்.

பின்னர் இருவரும் கைகோர்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆச்சரிய சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நர்ஸ் ஒருவர், இப்படி ஒரு விஷயத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை என ஆச்சரியத்துடன் கூறுவதை அந்த வீடியோவின் பின்னணியில் கேட்க முடிகிறது.

தங்கைக்கு ஆறுதல் தேவை என்பதை உணர்ந்து கொண்ட அவளை விட வலிமையான அக்கா, தங்கைக்கு ஆறுதலாக அவளது கையைப் பற்றிக் கொண்டிருக்கலாம் என தான் நினைத்ததாக தெரிவிக்கிறார் Celi.