மனைவியின் ரகசியத்தை கண்டுபிடித்து அதிர்ந்த கணவன்! ஏற்கனவே 9 பேருடன் வாழ்ந்திருந்தது அம்பலம்

அதன் படி கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் பெரியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று முடிந்த சில மாதங்களில் அருணா தேவையில்லாமல் நரசிம்மாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வேணுகோபால் செய்து கொடுத்த நகைகளுடன் அருணா வீட்டைவிட்டு சென்று விட்டார்.

ஒரு சில நாட்களில் மீண்டும் அவர் வந்து விடுவார் என்று வேணுகோபால் காத்திக் கொண்டிருந்த போது, அருணா விட்டுச் சென்ற பெட்டியை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதில், அருணா பலரை திருமணம் செய்திருந்தது தெரியவந்தது. அதற்கான புகைப்படங்களை பார்த்தபோது ஏற்கனவே அருணாவுக்கு மூன்று திருமணங்கள் ஆகியிருப்பது தெரியவந்தது.

முதலாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த காந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 15 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு வாரங்கலை சேர்ந்த ஹரீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு 20 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி இரண்டு மாதங்களில் சண்டை போட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் பவன் குமாரை திருமணம் செய்து கொண்டு 50 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலிசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவர் மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், பல்வேறு காரணங்களால் முதல் திருமணம் விவாகரத்து ஆகி 2வது திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், மணப்பெண் கிடைக்காமல் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் வழுக்கைத் தலையுடன் இருப்பவர்கள் போன்றவர்களை குறிவைத்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்ட ரீனா மேலும் 5 வாலிபர்களுக்கும் கல்யாண ஆசை காட்டி வலைவிரித்ததும் தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக அவர் போலீசில் சிக்கிக் கொண்டார், கைதான ரீனா ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.