தன்னுடைய பிரச்சனைகள் எதுவும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரியவேண்டாம் என அவர் தாய் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக இருப்பவர் கவின். நிகழ்ச்சி தொகுப்பாளர், சரவணன் மீனாட்சி சீரியல் என பிரபலமானவர்.
படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என துடிக்கும் அவருக்கு பிக்பாஸ் மூலமும் பெரும் ரசிகர்கள் வட்டம் கிடைத்துள்ளது. அண்மையில் அவரின் அம்மா பண மோசடி செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும், 7 வருட சிறை எனவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தை இயக்கிய தயாரிப்பாளர் ரவீந்திரன் பல விசயங்களை பேசியுள்ளார்.
நானும் அந்த விசயங்களை கவினுடை நண்பன் மூலம் அறிந்துகொண்டேன். கவின் நல்லவர், அவரின் குடும்பமும் நல்ல குடும்பம், அவர்களுடன் பழகியிருக்கிறேன்.
ஏதோ அவர்கள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்கள். கவின் அம்மாவை பெயிலில் எடுக்க நான் உதவி வருகிறேன். கவின் பார்க்க நன்றாக இருக்கிறார் என்பதால் அவர் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதாக பலர் நினைக்கிறார்கள்.
அவரின் கஷ்டம் அவருக்கு தான் தெரியும், குடும்ப கஷ்டத்திற்கு படிப்பை விட்டு நடிப்பிற்கு வந்தவர். சாதிக்க வேண்டும் என ஆசை அவருக்கு நிறைய இருக்கிறது.
பிரச்சனை பற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினுக்கு தெரியப்படுத்தினீர்களா என கேட்டேன். ஆனால் அவரின் அம்மா கவின் இப்போது எங்களுடன் வந்து கஷ்டப்படவேண்டாம், உள்ளே இருந்து ஜெயித்துவிட்டு வரட்டும் என கூறியுள்ளதாக ரவீந்திரன் கூறியுள்ளார்.