மனைவியை கொலை செய்த கணவன்! வேறு ஆணுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டதால் அதிர்ச்சி

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் போலிசில் சரணடைந்த சம்பவம் குறித்த பின்னணி தகவல் அதிரவைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் சமீலு. லாரி ஓட்டுனராக உள்ளார்.

Tamil Girls Chat Room

இவர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்றுவந்த நிலையில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சமீலுக்கும் அவர் மனைவிக்கும் சில நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கணவன் – மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சமீலு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற சமீலு போலிசாரிடம் மனைவியை கொலை செய்ததாக கூறினார்.

இதோடு தனது மனைவி வேறு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை போலிசாரிடம் காட்டி துரோகம் செய்ததால் தான் மனைவியை கொன்றதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சமீலுவை கைது செய்த போலிசார் அவர் மனைவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலிசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.