வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வேலை பார்த்த இளைஞன் இன்று பேருந்து நிலையத்தில் சுண்டல் விற்பது ஏன் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் என்று விற்று வந்தார்.

Tamil Girls Chat Room

இளைமை காலத்தில் இப்படி பட்டாணி , சுண்டல், மாங்காய் என்று விற்று வரும் இவரிடம், பிரபல தமிழ் ஊடகம் இது குறித்து கேட்டுள்ளது.

அப்போது அவர் எங்களுக்கு என்று வாடிக்கையாளர்களாக ஒரு 20 பேருக்கு மேல் இருக்கின்றனர். அவர்களுக்காகவே நான் இதை தினமும் செய்து வருகின்றேன். அதுமட்டுமின்றி ஒரு சிலர் நான் கொண்டு வரும் பட்டாணி, சுண்டலை தான் மதிய உணவாக சாப்பிடுகின்றனர்.

இந்த தொழிலை முதலில் எங்கள் தாத்தா ராஜகோபால் ஆரம்பித்து வைத்தார். அதன் பின் என் தந்தை கவனித்து வந்தார். இதனால் நான் என்னுடைய இளம் வயதில் திருமணம் முடித்து, சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கு எனக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். திருமணத்திற்கு முன்பு, பின்பும் சரி என் அப்பாவிற்கு இந்த சுண்டல் தொழிலை விட்டுவிடக்கூடாது, நாம் கஷ்டப்பட்ட காலத்தில் சிலர் உதவியிருக்கின்றனர்.

இதை விட்றாதப்பா என்றெல்லாம் சொனார். ஆனால் என் மனைவி மற்றும் மாமியார் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்.

நானும் சிங்கப்பூரில் டிரைவராக சம்பாதித்தேன், திடீரென்று ஒரு நாள் ஊரிலிருந்து போன் வந்தது. அதில் என் அப்பா இறந்துவிட்டார் என்று கூறினர், அதுமட்டுமின்றி அப்போது என் மனைவிக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

இதனால் ஊர் திரும்பிய நான் சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம் என்று இங்கே இருந்துவிட்டேன், முன்பெல்லாம் 10 மணிக்கு வந்தால் 2 மணிக்குள்ளே தீர்ந்துவிடும், ஆனால் இப்போது அப்படி இல்லை 5 மணி ஆகிறது, ஒரு சில நாட்கள் சுண்டல் மீதமாகிவிடும்.

இப்போது இருக்கும் இளைஞர்கள் எல்லாம் பாஸ்புட் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லாம் எங்களைப் போன்றோர் விற்கும் சுண்டல் போன்ற வகைகளை வாங்கி சாப்பிட வேண்டும், அப்போது தான் எங்கள் பிழைப்பு ஓடும்.

எப்படியோ மூன்று தலைமுறைக்கு நாங்கள் இந்த தொழிலை காப்பாற்றிவிட்டோம், அடுத்த தலைமுறை என் மகன், அவனும் இந்த தொழில் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் அது அவன் கையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.