இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் தங்கள் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது திராசர் என்ற கிராமம். இங்கு 600-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

Tamil Girls Chat Room

திராசர் கிராமத்தில் பல ஆண்டுகளாக விசித்தர பழக்கம் ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது இங்கு வாழும் ஆண்கள் முதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.

இதற்கான காரணத்தையும் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்த கிராமத்தில் முதல் மனைவியுடன் கணவருக்கு குழந்தை பிறக்காதாம்.

கணவர் இரண்டாம் திருமணம் செய்த பின்னரே இரண்டாம் மனைவிக்கு குழந்தைகள் பிறக்குமாம்.

அப்படி தொடர்ந்து நடப்பதால் தான் முதல் மனைவி விருப்பத்தின் படி கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

மேலும், கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து செல்ல வேண்டும்.

கர்ப்பமான பெண்கள் அவ்வளவு தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர முடியாது என்பதால் இன்னொரு மனைவி தண்ணீர் கொண்டு வர செல்வாராம்.

இதுவும் ஒரு ஆண், இரண்டு திருமணம் செய்து கொள்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.