குழந்தை பேறு இல்லாததால் ஏற்பட்ட சண்டையில் உணவில் விஷம் கலந்து மனைவி கணவனுக்கு ஊட்டிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும், அத்தியூத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Tamil Girls Chat Room

இருப்பினும் இந்த தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்ற பஞ்சவர்ணம் கணவனுடன் செல்ல மறுத்துள்ளார். அதன் பின் உறவினர்களின் சமரசத்திற்குப் பின் கணவனின் வீட்டிற்குச் செல்ல அவர் சம்மதித்துள்ளார்.

வீட்டிற்கே சென்ற உடனே இதைப் பற்றி பேசி இருவருக்கும் சண்டை வர, அவர்கள் இருவரையும் ராமசாமியின் சகோதரர் கணேசன், தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தங்க வைத்தார்.

ஆனால் அங்கும் இவர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கணவரின் தொந்தரவை தாங்க முடியாத பஞ்சவர்ணம் கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, அவ்வப்போது ராமசாமியை உணவில் விஷம் வைத்துக் கொல்லப் போவதாகவும் கூறி வந்துள்ளார். நேற்று முன் தினம் தனது திட்டத்தை நிறைவேற்ற நினைத்த பஞ்சவர்ணம், தக்காளி சாதம், முட்டை பொறியல், ரசம் சமைத்து, அதில் எலியைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை சேர்த்துள்ளார்.

அதன் பின் ராமசாமியை தன்னுடைய மடியில் படுக்க வைத்து, அவருக்கு ஊட்டிவிட்டுள்ளார். அப்போது பஞ்சவர்ணம், நீ தான் எனக்குப் பிள்ளை என்று கொஞ்சிய படியே சாப்பாடு ஊட்டிவிட்டுள்ளார்.

இதையடுத்து வெளியே வந்த பஞ்சவர்ணம், அருகில் உள்ள கணேசனின் வீட்டிற்குச் சென்று, அவரை சந்தித்து உங்கள் சகோதரருக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டுவிட்டேன், இன்னும் சற்று நேரத்தில் தங்கள் சகோதரர் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக தனது அண்ணனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சவர்ணத்தை தேவிப்பட்டினம் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.