இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய இளம் தாய்! எழுதிவைத்த கடிதம் சிக்கியது

கணவன் குடும்பத்தினரின் கொடுமையால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சீதா(28)  கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ராஜு என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Tamil Girls Chat Room

இந்த தம்பதியினருக்கு லக்ஷ் (4), ருத்ரா (5) என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அவரை கடுமையாக தாக்கி கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் சீதா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த நிலையில் தாய் வீட்டில் தங்கியிருந்த சீதா, ஆள் இல்லாத சமயத்தில் இரண்டு குழந்தைகளையும் மின் விசிறியில் மாட்டி தூக்கில் மாட்டி கொலை செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் இறந்த பின்னர் அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சீதாவின் சகோதரர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு மேற்கொண்ட சோதனையின் போது, குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என எழுதிவைக்கப்பட்டிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

இந்த நிலையில் சீதாவின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.