இதில் சில திருமணத்தை காணும் போது, வடிவேலுவின் “உனக்கு இது எத்தனாவது… உன்னவிட ரெண்டு லீடிங்கு….” டயலாக் மைண்டில் ஒலித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.

நடிகர் ஜெமினி எல்லாம் அந்த காலத்திலேயே நான்கு திருமணம் செய்தவர் என கூறுகிறார்கள். ஆனால், அதே காலத்தில் நடிகையரும் கூட முதல் திருமண பந்தத்தில் இருந்த போதே, வேறு ஒரு நடிகருடன் ரீல் லைஃபில் மட்டுமின்றி ரியல் லைஃபிலும் டூயட் பாடியுள்ளனர்.

Tamil Girls Chat Room

இப்படி ஒரு சிலர் நடிகர்கள் திருமணமான பெண்ணை மணந்த கதை இருக்க, மற்றொரு புறம் ஏமார்ந்து திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள்…. 1950-களில் இருந்து 2000கள் வரை என காலங்கள் கடந்தாலும் இந்த திருமணமான பெண்களை மணக்கும் முறை மட்டும் சினிமாவில் இருந்து கடந்து செல்லவே இல்லை..

எம்.ஜி.ஆர்

ஜானகி திரையுலகில் நுழைந்த ஆரம்பத்திலேயே நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதி பட் என்ற கன்னட கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது.

இராஜ முக்தி என்ற படத்தில் ஜானகி கதாநாயகியாக நடித்த போது, அதே படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். ஜானகி பார்க்க தனது முதலாவது மனைவியின் சாயலில் இருப்பதால், அவர் மீது ஈர்ப்பு கொண்டார் எம்.ஜி.ஆர். காதல்!

காதல்!

1950ல் மருதநாட்டு இளவரசி படத்தின் போதுதான் இவர்கள் இருவரும் காதலித்த துவங்கினார்கள். ஒருநாள் இவர்கள் இருவர் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் கணபதி பட்டிடம் சிக்கவே சண்டை முத்தி ஜானகி அவரை பிரிந்து எம்.ஜி.ஆரிடம் தஞ்சம் அடைந்தார்.

ஆயினும், ஏற்கனவே எம்.ஜி.ஆர்-ன் இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிருடன் இருந்தார். 1962 பிப்ரவரி 25 சதானந்தவதி மரணம் அடைந்தார்.

இதன் பிறகு 1962 ஜூன் 14-ம் நாள் இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும், ஜானகியின் மகன் சுரேந்திரன் என்பவரையும் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்.

சரத்குமார்

சரத்குமார் திருமணம் செய்துக் கொண்ட ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சரத் குமாருக்கும் ராதிகா இரண்டாவது மனைவி ஆவார். சரத் குமார் 1984ல் சாயா எனும்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலக்ஷ்மி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

விவாகரத்து பிறகு ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் போன்ற படங்களில் சரத் இணைந்து நடித்த நக்மாவுடன் இவர் உறவில் இருப்பதாக கூறி சாயா விவாகரத்து தொடர்ந்தார்.

இதன் பிறகு நக்மா – சரத் இடையிலான உறவு பிரிந்ததாக கூறப்படுகிறது. பின், 2000ம் ஆண்டு சாயா – சரத் இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர் சரத் பிப்ரவரி 4, 2001ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ராகுல் என்ற ஆண் குழந்தை 2004ல் பிறந்தார்.

பிரசாந்த்

தனது அடைமொழிக்கு ஏற்ப ஒரு காலத்தில் டாப் ஸ்டாராக இருந்தா நடிகர் பிரசாந்த். விஜய், அஜித்தை காட்டிலும் உயர்ந்த நடிகராக திகழ்ந்து வந்தார்.

ஆனால், ஒரே சமயத்தில் இவரது தொழில் மற்றும் இல்லறம் பல சிக்கல்களை சந்தித்து இவரை பெரும் சரிவு காண வைத்தது. நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

தீர்ப்பு!

ஆனால், திருமணமான சில மாதங்களில் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை இவர்களுக்கு தெரியவந்தது. இந்த காரணத்தால் நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

மறுபுறம் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை, வன்கொடுமை என வழக்கு பதிவு செய்தார். நீண்ட காலம் நீதிமன்றத்தில் நீடித்த இந்த வழக்கு ஏறத்தாழ நான்கு வருட வாதத்திற்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு சாதகமாக விவாகரத்து கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.