கோவை சரளா

தமிழ் திரையுலகில் முன்னணி கொமடி நடிகையாக திகழும் கோவை சரளாவுக்கு தற்போது 57 வயதாகும் நிலையில் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Tamil Girls Chat Room

தபு

47 வயதாகும் பிரபல நடிகை தபு சிறந்த நடிப்புக்காக இருமுறை தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை.

பூஜாகுமார்

விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை பூஜாகுமாருக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

பர்வீன் பாபி

70,80 களில் கனவு கன்னியாக வலம் வந்த பர்வீன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த பர்வீன் கடந்த 2005-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சுலக்சனா

நடிகை, பாடகி என பன்முகத்தன்மையோடு வலம் வந்த சுலக்சனா அமிதாப்பச்சன், ரிஷி கபூர், ராஜேஷ் கண்ணா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகியாக கடந்த 1994-ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சுஷ்மிதா சென் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாவார்.திருமணமே செய்து கொள்ளாத இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் 43 வயது சுஷ்மிதா சென் 27 வயதான ஆண் நண்பரான ரோஹ்மன் ஷாலை சுஷ்மிதா என்பவரை விரைவில் திருமணம் செய்யலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

கெளசல்யா

90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை கெளசல்யாவுக்கு தற்போது 39 வயதாகிறது, இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, கல்யாணம் செய்து கொண்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று மிகவும் குறுகிய எண்ணத்தோடு எனக்கு வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.