சிங்கப்பூரில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பிரகாஷ் (27). சிங்கப்பூரில் வசிக்கும் இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு குடிபோதையில் சென்றுள்ளார்.

Tamil Girls Chat Room

பின்னர் அங்கிருந்த பெண்ணை தவறான முறையில் தொட்டு தழுவியுள்ளார்.

இதை பார்த்த சிங் கீ என்ற நபர், அந்த பெண்ணிடம் அங்கிருந்து போகுமாறு கூறிய நிலையில் ராஜேந்திரன் தொடர்ந்து அவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

அங்கிருந்த கிளாடிஸ்டன் ஜோசப் (49) என்பவர் ராஜேந்திரன் அருகில் சென்ற போது அவரிடம் அதிகளவில் மது வாடை வீசியது தெரிந்தது, பின்னர் அவரை ராஜேந்திரன் கன்னத்தில் அடித்தார்.

இதன்பின்னர் பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது, இதையறிந்த ராஜேந்திரன் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் அருகில் உள்ள கால்வாயில் குதித்துள்ளார்.

இதை பார்த்த போலிஸ் அதிகாரியும் கால்வாயில் குதித்து ராஜேந்திரனை கைது செய்தார், இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் தற்சமயம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,

நீதிபதி கூறுகையில், ராஜேந்திரன் நடந்து கொண்ட விதம் மோசமானது. கைது செய்யப்பட்ட பின்னரும் போலிசாரிடம் சரியாக ஒத்துழைக்காமல் அவர்களிடம் முரட்டுதனமாக நடந்து கொண்டுள்ளார்.

தவறான வார்த்தைகளையும் அவர்களிடம் பேசியுள்ளார்.  அவருக்கு ஐந்து நாட்கள் சிறை தண்டனையும், S$2,500 (சிங்கப்பூர் டாலரில்) அபராதமும் விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.