திருச்சியில் 14 வயது மனநலம் குன்றிய சிறுமியை திமுக பிரமுகர் உட்பட 4 பேர் 7 மாதங்களாக தொடர்ந்து நாசம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்த புலிவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான 14 வயது மதிக்கத்தக்கவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

Tamil Girls Chat Room

சற்றே மனநிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவில்லை. இதற்கிடையே சிறுமியின் தந்தையும் இறந்து விட்டதால் விவசாய கூலித்தொழில் செய்து சிறுமியின் தாய் பிழைப்பு நடத்தி வந்தார்.

தான் வேலைக்கு செல்லும் போது மனநிலை பாதித்த மகளை அவரது தாத்தாவின் கண்காணிப்பில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட அவரது தாய் சிறுமியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமாத கர்ப்பம் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த தாய் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலிசார் நடத்திய விசாரணையில், 57 வயது பால்காரன் முத்து, 51 வயது டீக்கடைக்காரர் செல்வராஜ், 45 வயது ராமராஜ் மற்றும் பேரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த திமுகவை சேர்ந்த 49 வயது செல்வராஜ் ஆகிய இந்த 4 பேரும்தான் சிறுமியை சீரழித்துள்ளனர். இது கடந்த 7 மாதமாகவே தொடர்ந்து நடந்துள்ளது.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.