கரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.

Tamil Girls Chat Room

தோல்வியே இல்லை…

தொடர்ந்து இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது . இதன் மூலம் அந்நிய மண்ணில் இரண்டாவது முறையாக தொடரின் எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் அசத்தியது இந்திய அணி.

முன்னதாக கடந்த 2017ல் இலங்கை சென்ற இந்திய அணி (டெஸ்ட் 3-0, ஒருநாள் 5-0, டி-20) தோல்வியை சந்திக்காமல் தொடரை வென்றது.

வெற்றிக்கேப்டன் கோலி… 

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி தகர்த்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன்கள்:

கோலி – 28 வெற்றிகள் (48 போட்டிகள்)
தோனி- 27 வெற்றிகள் (60 போட்டிகள்)
கங்குலி – 21 வெற்றிகள் (49 போட்டிகள்)
அசாருதின் – 14 வெற்றிகள் (47 போட்டிகள்)
கவாஸ்கர் – 9 வெற்றிகள் (47 போட்டிகள்) 

6வது மிகப்பெரிய வெற்றி….
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அந்நிய மண்ணில் 6வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அந்நிய மண்ணில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றிகள்: 
318 – எதிர்- வெஸ்ட் இண்டீஸ், 2019
304 – எதிர்- இலங்கை, 2017
279- எதிர்- இங்கிலாந்து, 1986
278- எதிர்- இலங்கை, 2015
272 – எதிர்- நியூசிலாந்து, 1967/68
257 – எதிர்- வெஸ்ட் இண்டீஸ், 2019