திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம்.

ஆம், உண்மை தான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு.

Tamil Girls Chat Room

ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பெண்மணி 300 வருடங்கள் பழமையான பேயை திருமணம் செய்து; அதை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

அதனுடன் தொடர்புகொண்டு பேசியபோது அந்த அமானுஷ்ய சக்தியின் பெயர் ஜாக் என்றும் இவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், இவர் கடற்கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததாக அமான்டா தெரிவித்தார்.

இதையடுத்து அவர் அந்த அமானுஷ்ய சக்தியுடன் டேட்டிங் செய்ய துவங்கினார். ஒரு கட்டத்தில் அந்த பேயையே அமான்டா திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக அமான்டா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; “நாங்கள் டேட்டிங் செய்ய துவங்கிய போது தான் அவர் தனது மற்றொரு பக்கத்ததை காட்ட துவங்கினார்.

அது சரியானதாக இல்லை. அவர் எனது உடலுக்குள் புகுந்து எனது எனர்ஜியை காலியாக்கினார். இதனால் எனது உடல் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதனால் அவரை விட்டு விலக நினைத்தேன்.

அதனால் அவர் என்னை கொல்ல முயற்சி செய்தார். இதனால் வேறு வழியின்றி பேயோட்டும் முயற்சியை செய்து அவரை பிரிந்து விட்டேன். தற்போது எனது உடல் நிலை நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளது” என கூறினார்.